புயல் எச்சரிக்கைக்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கின
புயல் எச்சரிக்கைக்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய குளச்சல் மீனவர்கள் வலையில் அதிக அளவு கேரை மீன்கள் சிக்கின.
குளச்சல்,
குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 12 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியது.
புயல் எச்சரிக்கை
இதன் காரணமாக குமரி, கேரள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும், ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களுக்கும் புயல் எச்சரிக்கை குறித்து அவசர அறிவிப்பு வயர்லெஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களும் அவசர, அவசரமாக கரை திரும்பினார்கள். பின்னர், அவர்கள் விசைப்படகுகளை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தியிருந்தனர். இதனால், மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியது.
கடலுக்கு சென்றனர்
கடந்த வாரம் புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 17–ந் தேதி குளச்சலில் இருந்து அனைத்து விசைப்படகுகளும் கடலுக்கு சென்றன. இவற்றில் சில விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. அதில் அதிக அளவில் கேரை மீன்கள் சிக்கி இருந்தன. இந்த மீன்கள் துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு ஏலமிடப்பட்டது. அவற்றை மீன் வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். புயல் எச்சரிக்கைக்கு பின்பு நேற்று குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் களைக்கட்டியது.

Related Tags :
Next Story