கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை 750 கிலோ பிளாஸ்டிக் பை, கப்புகள் பறிமுதல்
திருச்சியில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட 750 கிலோ பிளாஸ்டிக் பை, கப்புகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் திடீர் சோதனை செய்து 50 மைக்ரானுக்கு கீழ் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இதேபோல் மாநகராட்சி உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வயலூர் ரோடு, ஈ.வி.ஆர்.ரோடு, ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட பெரிய கடை வீதி,பெரிய கம்மாளதெரு உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது 50 மைக்ரானுக்கு கீழ் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அபராதம்
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது “ மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 55 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 750 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் டீ கப்புகளை போட்டு சாக்கடையை அடைத்து சுகாதார சீர் கேடு ஏற்படுத்த காரணமாக இருந்த ஒரு கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதை கடை உரிமையாளர்கள் கைவிட வேண்டும்” என்று கூறினர்.

Related Tags :
Next Story