சோப்பு, டீத்தூள் வாங்கினால் தான் ரேஷன் பொருள் : விசாரணை நடத்த தாசில்தார் உத்தரவு
மஞ்சூர் அருகே சோப்பு, டீத்தூள் வாங்கினால் தான் ரேஷன் பொருள் வழங்குவதாக புகார் விசாரணை நடத்த தாசில்தார் உத்தரவிட்டு உள்ளார்.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே எடக்காட்டில் சோப்பு, டீத்தூள் வாங்கினால் தான் ரேஷன் பொருள் வழங்குவதாக புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த தாசில்தார் உத்தரவிட்டு உள்ளார்.
மஞ்சூர் அருகே எடக்காட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் எடக்காடு பஜாரில் நியாய விலைக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் இந்த நியாய விலைக்கடை ஒப்படைக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் வந்த உடன் விற்பனையாளர் புதிதாக நியமிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக இந்த நியாய விலைக்கடையில் போதுமான பொருட்கள் சரிவர குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வந்தனர். மேலும் அத்தியாவசிய ரேஷன் பொருட்களான பருப்பு, அரிசி, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களை வாங்க செல்லும் போது வெளிமார்க்கெட்டில் இருந்து வாங்கிய மளிகை பொருட்களான மிளகாய், சர்க்கரை, கோதுமை, ராகி, டீத்தூள், சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க சொல்லி வற்புறுத்துவதாக தெரிகிறது. குறைந்த பட்சம் ரூ.200-க்கு வெளிமார்க்கெட் பொருட்கள் வாங்கினால் தான் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில் வினியோகிக்கப்படும் என்று விற்பனையாளர் வற்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் மனோகரன் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக இந்த நியாய விலைக்கடை மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் கொண்டு வந்த பிறகு தான் வெளிமார்க்கெட் பொருட் களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். எடக் காடு பகுதியில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள் தான் உள்ளனர். தற்போது இப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தொழிலாளர்களுக்கு சரிவர வேலை கிடைப்பதில்லை.
வெளிமார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்து விற்கும் பொருட்களை நியாய விலைக்கடையில் விற்க சட்டப்படி அனுமதி கிடையாது. அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் குடும்ப அட்டைத்தாரர்களை வெளிமார்க்கெட் பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்து வது சட்டப்படி தவறு. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து குந்தா தாசில்தார் ஆனந்தி கூறியதாவது:-
கூட்டுறவு நிர்வாகத்தின் கீழ் உள்ள நியாய விலைக்கடைகளில் கூட்டுறவு பண்டக சாலையில் விற்கப்படும் பொருட்களை விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களை வற்புறுத்தி கூட்டுறவு பண்டக சாலை மளிகை பொருட்களை விற்க கூடாது. குடும்ப அட்டைதாரர்கள் விரும்பி கேட்டால் மட்டுமே விற்க வேண்டும். சோப்பு, டீத்தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. இது பற்றி புகார் வந்து உள்ளது. சம்பந்தப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த குடிமை பொருள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். புகாரில் உண்மை இருப்பின் சம்பந்தப்பட்டவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story