பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊட்டியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
ஊட்டியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தம் காரணமாகவும், பணியிடங்கள் காலியாக இருப்பதாலும் மின் கம்பங்களை பராமரிப்பது, புதியதாக கட்டப்படும் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பது உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் தொடங்கி உள்ளதால், தற்போது சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஹீட்டர், கீசர் போன்ற மின் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருந்தால் சம்பவ இடத்துக்கு உடனுக்குடன் சென்று சரிசெய்து விடுவார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 130 மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட அனைத்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்க வேண்டும், அரசு நிர்ணயித்த ரூ.380 தினக்கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதில் விசுவா, சந்தோஷ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story