சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்போம் நியமன எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
வருகிற 26-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்போம் என்று நியமன எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்து அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நியமன எம்.எல்.ஏ.க்களாக சாமி நாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டது செல்லும் என்று நேற்று பர பரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதுவை மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சாமிநாதன் உள்பட 3 பேரும் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதன்பின் அங்கு 3 பேரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது.
மத்திய அரசு முறையாக 3 எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்தது. அதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் கவர்னர் கிரண்பெடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். எங்களை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது சரி என்று சென்னை ஐகோர்ட்டு தற்போது தீர்ப்பளித்துள்ளது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் எப்போதும் சென்னை ஐகோர்ட்டை மேற்கோள் காட்டி வந்தனர். இப்போது தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவர்கள் மக்கள் பணியை செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும்.
புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்த ஆட்சியாளர்கள் தடையாக இருக்க மாட்டார்கள் என நம்புகிறோம். இந்த தீர்ப்புக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கருத்து கூற மாட்டார் என நம்புகிறோம். வரும் 26-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் நாங்கள் பங்கேற்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story