சபாநாயகரின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம் கவர்னர் கிரண்பெடி பேட்டி


சபாநாயகரின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம் கவர்னர் கிரண்பெடி பேட்டி
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 23 March 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகரின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார். இது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

புதுச்சேரி,

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை இதுவரை நான் படித்துபார்க்கவில்லை. ஊடகங்களில் வெளியான தகவல் களின்படி எனது கருத்தை வெளியிடுகிறேன். மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும், எனது அதிகாரத்துக்கு உட்பட்டு சட்ட ரீதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தேன்.

நான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். அரசின் பொறுப்புடைமை அதிகரிக்கும். மக்களுக்காக களத்தில் பணியாற்ற மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மனுதாரர்களுக்கு தார்மீக உரிமை உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story