மாநகர் மாவட்ட தலைவர் கார் எரிப்பு எதிரொலி: பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
கோவையில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை,
மாவட்ட தலைவர் கார் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருப்பவர் சி.ஆர்.நந்தகுமார் (வயது 48). இவருடைய வீடு பீளமேடு ராமலட்சுமி நகரில் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் மீது சில மர்ம ஆசாமிகள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து கோவை வந்து சேதமடைந்த காரை பார்வையிட் டார். இந்த சம்பவம் குறித்து கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதா மாவட்ட தலைவர் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் எதிரொலியாக கோவையில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகளுக்கு நேற்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி பீளமேட்டில் உள்ள மாவட்ட பா.ஜனதா தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வீடு, ரத்தினபுரி 7-வது விரிவு பகுதியில் உள்ள கோவை மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் வீடு, டாடாபாத் 4-வது தெருவில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராசு வீடு, ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தில் உள்ள பா.ஜனதா துணை தலைவர் மதன்மோகன் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
கோவை ரத்தினபுரியில் உள்ள கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் தனபால் வீட்டுக்கு நேற்றுக்காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு இரண்டு போலீசார் வீதம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி கோவையில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகி ஆகியோரின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும்’ என்றார்.

Related Tags :
Next Story