கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் புதிய வரிகள் விதிக்கப்படுமா?


கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் புதிய வரிகள் விதிக்கப்படுமா?
x
தினத்தந்தி 23 March 2018 5:00 AM IST (Updated: 23 March 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்படுகிறது.

கோவை,

கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. புதிய வரிகள் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறாததால், கோவை மாநகராட்சி நிர்வாகத்தை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் கவனித்து வருகிறார். மாநகராட்சி வரவு, செலவு, புதிய திட்டங்கள் தொடர்பான பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், பட்ஜெட்டை தாக்கல் செய்து திட்ட விவரங்கள் குறித்து விளக்கி பேசுகிறார். இதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவையில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் சீரமைப்பு, திடக்கழிவு மேலாண் மை திட்டத்தை கையாளும் முறை, புதிய நடைமேம்பாலங்கள் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை ரெயில்நிலையம் அருகே பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில் நடைமேம்பாலம், அரசு ஆஸ்பத்திரி, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப் பட்டன. ஆனால் இந்த திட்டம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகள் இருக்கும் என்று தெரிகிறது.

கோவை நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்ட விவரங்கள் குறித்தும், 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் தினமும் 1,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அடிக்கடி குப்பை கிடங்கில் தீ பிடிப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் குப்பைகளை தரம் பிரிப்பதில் முழுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை. எனவே வெள்ளலூர் குப்பை கிடங்கு பராமரிப்பு தொடர்பாகவும், திடக்கழிவு மேலாண்மை தொடர்பாகவும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

குடிநீர் கட்டணம் உயர்வு, குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பைக்கு வரி என்று பல்வேறு வரி உயர்வு தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும் பட்ஜெட்டில் வரி உயர்வு தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படு கிறது.

ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story