விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 March 2018 3:30 AM IST (Updated: 23 March 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஹரிகரன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில், வருகிற கூட்டுறவு சங்க தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ம.க. போட்டியிடுவது, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்காததை கண்டித்தும், உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு வருகிற 27-ந் தேதியும், 28-ந் தேதி உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜெனீவாவில் நடந்த ஐ.நா. சபையில் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து பேசிய டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு நன்றி தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் குழந்தைவேல், வேல்முருகன், சந்தோஷ், மணிபாலன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கோபாலகிருஷ்ணன், காமராஜ், தொகுதி அமைப்பு தலைவர் ராஜா, தொகுதி செயலாளர் சிவக்குமார், நகர தலைவர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

Next Story