ஓமலூர் அருகே காரில் வந்து ஆடு திருடிய கும்பலில் மேலும் ஒருவர் கைது


ஓமலூர் அருகே காரில் வந்து ஆடு திருடிய கும்பலில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 23 March 2018 3:30 AM IST (Updated: 23 March 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே காரில் வந்து ஆடு திருடிய கும்பலில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி ராமகிருஷ்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 55). இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இதில் இரண்டு ஆடுகளை கடந்த 19-ந்தேதி நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் 7 பேர் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

அப்போது நாய் குறைத்ததால் பழனியம்மாள் வெளியே வந்து பார்த்தார். திருட்டு கும்பலை கண்டதும் பழனியம்மாள் சத்தம்போட்டார். இதை கேட்டதும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது திருட்டு கும்பலில் வந்த ஒருவரை பிடித்து தொளசம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி கொம்புதூக்கி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (22) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மற்றவர்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டு கும்பலைச் சேர்ந்த மணி (27) என்ப வரையும் போலீசார் கைது செய்தனர். மணியும் கொம்புதூக்கியைச் சேர்ந்தவர் தான். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தீவட்டிப்பட்டி, ஓமலூர் உள்பட பல இடங்களில் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பகலில் சென்று நோட்டமிடுவார்கள். இரவில் காரில் வந்து ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. எனவே ஆடு திருட்டு கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story