வருமான வரித்துறையை கண்டித்து காங்கிரசார் பேரணி
காங்கிரஸ் தலைவர்களை குறி வைப்பதாக கூறி வருமான வரித்துறையை கண்டித்து நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.
பெங்களூரு,
காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்து சோதனை நடத்துவதாக கூறி வருமான வரித்துறையை கண்டித்து நேற்று பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி எம்.ஜி. ரோடு சர்க்கிள் அருகே உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை நோக்கி சென்று முற்றுகையிட முயன்றனர். இந்த பேரணியை மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வருமான வரி அலுவலகத்திற்கு முன்பே காங்கிரஸ் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் சிலர் போலீசார் அமைத்திருந்த இரும்பு தடுப்புகளை தாண்டிச்செல்ல முயற்சி செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அவர்களை கட்சியின் மூத்த தலைவர்கள் அமைதிப்படுத்தினர். அதில் ஒருவர் போலீசாரின் தடுப்பை மீறி சென்று வருமான வரி அலுவலக பெயர் பலகைக்கு மை பூச முயற்சி செய்தார். அவரை போலீசார் பிடித்து சென்றனர்.
மந்திரி ராமலிங்கரெட்டி பேசுகையில், “சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு உள்நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் வருமான வரி சோதனையை நடத்துகிறது. தேர்தல் ஆணையம், வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைவர்களை அரசியலில் இருந்து ஒழிக்க சதி நடக்கிறது. அரசியல் நோக்கத்திற்காக இத்தகைய சோதனைகள் நடக்கின்றன. காங்கிரஸ் தலைவர்களை மிரட்டுகிறார்கள்“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய மந்திரி கே.ஜே.ஜார்ஜ், “மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்றவில்லை. பா.ஜனதா, மக்களை ஏமாற்றிவிட்டது. தேர்தலில் தோல்வி பயம் வந்துள்ளதால், காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நேரடியாக தேர்தலை சந்தித்து வெற்றிபெற பா.ஜனதாவுக்கு தைரியம் இல்லை. அதனால் அரசியல் சாசன அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. பா.ஜனதாவின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்“ என்றார்.
அதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் தலைவர்கள் அங்கு அதிகாரி பிரசன்னகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story