அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ரூ.17 லட்சத்துக்கு ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.
அந்தியூர்,
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று பருத்தி மற்றும் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், ஆப்பக்கூடல், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், ஒலகடம், தாமரைக்கரை, பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி, நிலக்கடலையை கொண்டு வந்திருந்தனர்.
இதில் பி.டி.ரக பருத்தி 1,100 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 480-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 366-க்கும் விற்பனை ஆனது. பருத்தி மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.
நிலக்கடலை (பச்சை) 107 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.1,919-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 700-க்கும் விற்பனை ஆனது.
நிலக்கடலை (காய்ந்தது) 454 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 669-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 750-க்கும் விற்பனை ஆனது. நிலக்கடலை மொத்தம் ரூ.7 லட்சத்து 39 ஆயிரத்து 350-க்கு ஏலம் போனது.
நேற்று நடந்த ஏலத்தில் பருத்தி மற்றும் நிலக்கடலை மொத்தம் ரூ.24 லட்சத்து 39 ஆயிரத்து 350-க்கு ஏலம் போனது. ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், காங்கேயம், தர்மபுரி, அவினாசி, மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த வியாபாரிகள் பருத்தி மற்றும் நிலக்கடலையை ஏலம் எடுத்துச்சென்றனர்.

Related Tags :
Next Story