வீட்டுவசதி வாரிய குடியிருப்பு–2 பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு–2 பகுதியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,

பொதுமக்கள் முற்றுகை
தூத்துக்குடி– எட்டயபுரம் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு–2 பகுதியை சேர்ந்த மக்கள் குடியிருப்பு நலச்சங்க செயலாளர் ராஜபாண்டி, முன்னாள் கவுன்சிலர் பாலகுருசாமி ஆகியோர் தலைமையில் சுமார் 50 பேர் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மாநகராட்சி ஆணையாளர் ரூபன் சுரேஷ் பொன்னையாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
அடிப்படை வசதி இல்லை
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு–2 பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி சங்கரப்பேரி பஞ்சாயத்தில் இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. மாநகராட்சியுடன் இணைந்த பிறகு, இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
நாங்கள் முறைப்படி அனைத்து அரசு வரிகளையும் செலுத்தி வருகிறோம். ஆனால் எங்கள் பகுதியில் சாலை வசதியோ, குடிநீர் வசதியோ இல்லை. மழைக்காலங்களில் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி மிகுந்த சுகாதார சீர்கேடு உருவாகிறது. இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நடவடிக்கை தேவை
தற்போது 4–வது குடிநீர் குழாய் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பல நாட்கள் ஆகிறது. எங்கள் பகுதியை ஒட்டி உள்ள மற்ற இடங்களுக்கு 4–வது குடிநீர் குழாய் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் பகுதிக்கு மட்டும் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் வசதியுடன் சாலைகள் அமைக்கவும், சீரான குடிநீர் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
வீணாகும் குடிநீர்
இது குறித்து வீட்டு வசதி வாரிய நலச்சங்கம் பகுதி–2 செயலாளர் ராஜபாண்டி கூறும் போது, ‘வீட்டு வசதி வாரிய குடியிருப்பு–2 பகுதியில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சாலையில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்று கொண்டு இருக்கிறது. மாநகராட்சியில் பணம் செலுத்திய மறுநாள் குடிநீர் இணைப்பு தருவதாக கூறினார்கள். ஆனால் பணம் செலுத்தி 3 ஆண்டுகள் ஆகியும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. ஆகையால் எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறினார்.

Related Tags :
Next Story