எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடியில், வருகிற 28–ந் தேதி நடக்கிறது


எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடியில், வருகிற 28–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 24 March 2018 2:00 AM IST (Updated: 23 March 2018 6:39 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், வருகிற 28–ந்தேதி(புதன்கிழமை) எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், வருகிற 28–ந்தேதி(புதன்கிழமை) எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இந்த மாதத்துக்கான (மார்ச்) கூட்டம், வருகிற 28–ந்தேதி(புதன்கிழமை) காலை 11 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக சங்கு கூடத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு சிலிண்டர் வினியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளலாம். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுக்கலாம்.

புகார் தெரிவிக்கலாம்

இந்த கூட்டத்தில், நுகர்வோர் பெயர் மாற்றம், புதிய எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், எரிவாயு வினியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் புகார்களை இந்த கூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story