தூத்துக்குடி மாவட்டத்தில் 12,439 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.103 கோடி உதவித் தொகை கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 12,439 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.103 கோடி உதவித் தொகை கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
x
தினத்தந்தி 24 March 2018 2:15 AM IST (Updated: 23 March 2018 6:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 439 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.103 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 439 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.103 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, பிளாஸ்டிக் முடநீக்கியல் சாதனம், செயற்கை கை, கால், ஊன்றுகோல், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக்கருவி, கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கை, கால் குறைபாடு உள்ள 16 ஆயிரத்து 729 பேருக்கும், காது கேளாதவர் 4 ஆயிரத்து 510 பேருக்கும், கண் பார்வை இல்லாத 3 ஆயிரத்து 391 பேருக்கும், மனவளர்ச்சி குன்றிய 7 ஆயிரத்து 871 பேர் உள்பட மொத்தம் 34 ஆயிரத்து 220 மாற்றுத்தறினாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும், 23 ஆயிரத்து 209 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

ரூ.103 கோடி

கடந்த 2011–ம் ஆண்டு முதல் இதுவரை மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 4 ஆயிரத்து 861 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.69 கோடியே 33 லட்சமும், கை, கால் பாதிக்கப்பட்ட 593 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.8 கோடியே 76 லட்சமும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 33 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.25 லட்சத்து 95 ஆயிரம், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 101 பேருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.58 லட்சத்து 32 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல்வேறு திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 439 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.103 கோடி மதிப்பிலான உதவித்தொகைகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமும் நடத்தப்பட்டது. அதன் மூலமும் மனுக்கள் பெறப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story