வளர்ச்சித் திட்டப்பணிகளில் தொய்வு: சிவகங்கை நகராட்சிக்கு ஆணையாளரை நியமிக்க வேண்டும், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு
சிவகங்கை நகராட்சிக்கு ஆணையாளரை உடனடியாக நியமித்து வளர்ச்சி திட்டப் பணிகள் தொய்வின்றி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை நகராட்சி முன்னாள் உறுப்பினர் சோதனைமுத்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை நகராட்சியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆணையர் பணியிடம் காலியாகவே உள்ளது. நகராட்சியின் பொறியாளரே தற்போது கூடுதல் பொறுப்பாக ஆணையாளர் பணிகளையும் கவனித்து வருகிறார்.
நகராட்சியில் முழு நேர ஆணையாளர் இல்லாததால், புதிய வீடுகளுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்குவது, புதிய வீடுகளுக்கு வரி விதிப்பது, பொது சுகாதார பணிகளை ஆய்வு செய்வது, மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி மண்டல இயக்குனர் நடத்தும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பது உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள் கட்டமைப்புத் திட்டத்தில் 2017-2018-ம் ஆண்டிற்கு ரூ.3 கோடி, 14-வது மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.52 லட்சம் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படாமலேயே உள்ளன.
எனவே சிவகங்கை நகராட்சி பொதுமக்களின் நலன் கருதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ள நகராட்சி ஆணையாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story