கூட்டுறவு சங்க தேர்தலில் பா.ம.க. போட்டியிடும்: ஜி.கே.மணி தகவல்


கூட்டுறவு சங்க தேர்தலில் பா.ம.க. போட்டியிடும்: ஜி.கே.மணி தகவல்
x
தினத்தந்தி 24 March 2018 4:30 AM IST (Updated: 24 March 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று திண்டுக்கல்லில் ஜி.கே.மணி கூறினார்.

திண்டுக்கல்,

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, திண்டுக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகம் பல ஆண்டுகளாக நதிநீர் உரிமைகளை இழந்து வருகிறது. கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே 3-வது தடுப்பணையை கட்டு கிறது. இன்னும் 2 தடுப் பணைகள் கட்டினால் பவானி ஆற்றில் இருந்து தமிழ கத்துக்கு தண்ணீர் கிடைக் காது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

பவானியில் தடுப்பணை களை கட்டுவது நதிநீர் சட்ட மீறல். அதை தமிழக அரசு தடுக்கவில்லை. மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதோடு, தமிழகத்துக்கு துரோகம் செய் கிறது. முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி தற்போது பவானி என நதிநீர் உரிமைகள் தொடர்ந்து பறிபோகிறது.

தமிழக அரசு பஸ் கட்டணத்தை 90 சதவீதம் வரை உயர்த்தியது. பின்னர் கண்துடைப்பாக சிறிது குறைத்தது. மக்கள் பாதிக்கப் படுவதால், பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

கடந்த முறை கூட்டுறவு சங்க தேர்தலில் எதிர்க்கட்சி களுக்கு வாய்ப்பு அளிக்க வில்லை. ஆளும்கட்சியின ரிடம் மட்டுமே வேட்புமனுவை வாங்கி, அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். ஒட்டுமொத்த ஜனநாயக படு கொலை நடந்தது. தற்போது நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் பா.ம.க. போட்டியிடும். தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.

திண்டுக்கல், தேனி உள்பட பல மாவட்டங்களில் காய்கறிகள், பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. எனவே, அவற்றை சேமித்து வைத்து விற்பதற்கு குளிர்பதன கிடங்கு, விற்பனை மையம் அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி, கோடைகாலத்துக்கு முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகையை முழு மையாக வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 29-ந்தேதி கடைசி நாள் ஆகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 30-ந்தேதி விவசாயிகளின் போராட்டத் தில் நாங்களும் பங்கேற்போம். விவசாயிகளின் முடிவுக்கு துணையாக இருப்போம். விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம். அனைத்து கட்சியினரும் பிரதமர் வீடு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.

கர்நாடகா, ஆந்திர அரசுகள் மக்கள் பிரச்சினை என்றால் மத்திய அரசிடம் உடனே வலியுறுத்துகின்றன. தமிழக அரசும், வறட்சி பற்றி மத்திய அரசிடம் கூறி தேவையான நிதியை பெற வேண்டும். ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை, ஆத்தூர் காமராஜர் அணை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், குளங்களை தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும்.

திண்டுக்கல்லில் கடந்த 2009-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட் டப்பட்டது. 9 ஆண்டுகள் ஆகியும் கல்லூரி அமைய வில்லை. அனைத்து மாவட் டங் களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்குவழி சாலை அமைப்ப தற்கு, மக்களை பாதிக்காமல் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசினார். கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பரசு ராமன் தலைமை தாங்கினார். இதில் மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார், துணைத் தலைவர் கோபால், மாவட்ட செயலாளர்கள் ஆரோக்கியதாஸ், ரவிச்சந் திரன், வைரமுத்து, அமைப்பு செயலாளர்கள் கனகராஜ், திருப்பதி, உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தேனி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தேனியில் நடந்தது. இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். முன்ன தாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றத்துக்காக வந்தவர் கள் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற் படுத்தி உள்ளது. இதுவரை 20 பேர் உயிர் இழந்துள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆய்வில், முழு உண்மையை கண்டறிய வேண்டும். இனி இப்படி ஒரு சம்பவம் தொட ராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தேவாரம் அருகே பொட்டிப் புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர் பாக பரவலாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. 1,600 கிலோமீட்டர் நீளம் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையில் பொட்டிப்புரத்தில் ஏன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது? மேற்குதொடர்ச்சி மலையில் தொடங்க வேண்டும் என்றால் குஜராத்தில் தொடங்க வேண்டியது தானே.

இந்திய அளவில் தமிழ் நாட்டை எடுத்துக் கொண் டால், போதுமான அளவில் காடுகள் இல்லை. காடுகள் நாளடைவில் அழிந்து வரு கிறது. அவை பாதுகாப்பு இல் லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டம். இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல் படுத் தக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். 

Next Story