ஆழியாறு, திருமூர்த்தி அணைப்பகுதிகளில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணை பகுதிகளில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாகவும் கொடுத்தனர்.
கூட்டத்தில், கோரிக்கைகள் முன்வைத்து விவசாயிகள் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளான ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைப்பகுதியிலும் தண்ணீர் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த அணையில் இருந்து குறைந்த அளவே கிடைக்கும் தண்ணீரையும் பல இடங்களில் உள்ள வசதி படைத்தவர்கள் சிலர் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர் உதவியோடு முறைகேடாக தண்ணீரை திருடி வருகின்றனர். நாளுக்கு நாள் தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளது. திருமூர்த்தி அணை மற்றும் ஏழு குளத்தில் தேக்கப்படும் தண்ணீர் குழாய் மூலமாக உறிஞ்சப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீர் ஆண்டு முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி இந்த தண்ணீர் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஏராளமாக முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள 50 ஏக்கர் மற்றும் 7 குளங்களின் பாசனத்தாரர்களுக்கு உரிய பாசன வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் யாரும் பணியில் இருப்பதில்லை. செல்போன் எண்களையும் தகவல் பலகையில் எழுதி வைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே செல்போன் எண்களை அலுவலக தகவல் பலகைகளில் எழுது வைக்கவும், கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலக நேரங்களில் அலுவலகங்களில் பணியில் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் அங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு 40 கிலோ மூடைக்கு கிலோவுக்கு 20 பைசா வீதம் ரூ.20-ஐ விவசாயிகளிம் இருந்து பெறுகிறார்கள். ஆனால் தாராபுரத்தை சுற்றியுள்ள சில கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு 90 பைசா வரை வசூல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் அதிக அளவு வசூலிக்கும் இந்த தொகையை தடுத்து நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாராபுரம் ஒழுங்கு விற்பனை கூடம் கடந்த 30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
ஆகவே அங்கு சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கலூர், குண்டடம், காங்கேயம் மற்றும் உடுமலை பகுதியில் சில ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளோம். ஆனால் எங்களுக்கு கிடக்க வேண்டிய தண்ணீர் முறையாக கிடைக்கவில்லை. ஆகவே எதிர்வரும் காலத்தில் நீர் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் முறையாக கையாள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினார்கள். இந்த கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குமார், திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஷ்பச்சாவு, வேளாண்மை துறை இணை இயக்குனர் முகம்மதுஇக்பால், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story