ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் பெருந்துறை வந்தார்
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பெருந்துறைக்கு வந்தார்.
பெருந்துறை,
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறை அருகே உள்ள சரளையில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க.வினர் பெருந்துறையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று பெருந்துறைக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஓய்வு எடுப்பதற்காக மாநாடு நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு புறப்பட்டு சென்றனர்.
பின்னர் மதியம் 2 மணி அளவில் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாநாட்டு திடலுக்கு வந்தனர். அவர்களை மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் சு.முத்துசாமி, பெருந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி, ஊடக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் வி.சி.சந்திரகுமார் மற்றும் தி.மு.க.வினர் வரவேற்று மாநாட்டு அரங்குக்குள் அழைத்து சென்றனர்.
இதையொட்டி மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு உள்ள திராவிட இயக்க வரலாற்று புகைப்பட கண்காட்சியை துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து மாநாட்டு மேடை அலங்காரம், மாநாட்டின் உட்புற அமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டு சிறப்பான முறையில் மாநாட்டு பணிகள் நடைபெற்று உள்ளதாக பாராட்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள விருந்தினர் விடுதிக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
Next Story