கடலூரில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 March 2018 3:30 AM IST (Updated: 24 March 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையில் 8 உதவி வேளாண்மை அலுவலர்கள், 5 துணை வேளாண்மை அலுவலர்கள் பணி இடங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இது தவிர வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைகளில் பல்வேறு பணியிடங்களை குறைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதை கண்டித்து கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் மணிமாறன், மாவட்ட செயலாளர் ராமதாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் சண்முகம், என்.ஜி.ஓ.சங்க மாவட்ட தலைவர் ஆனந்த துரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு இடு பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வட்டார, ஒன்றிய செயலாளர்கள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகத்துறையில் பணியாற்றி வரும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தணிக்கையாளர் விஜய சண்முகம் நன்றி கூறினார். 

Next Story