இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 227 பேர் கைது
இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 215 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடிகரை,
தமிழகத்தில் ராமர் ரத யாத்திரையை தடை செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோவை துடியலூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியத்தை விமர்சனம் செய்துள்ளனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந்து முன்னணி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளை விமர்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து இருதரப்பின் சார்பில் துடியலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணி நிர்வாகிகள் உருவை பாலன், மதியழகன், கோவிந்தன் மற்றும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் அமீர் அப்பாஸ், அசன் பாதுஷா, சூலைமான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னணியினர், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுதலை செய்யகோரியும் நேற்று பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ள வீரபாண்டி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 35 பேர் கைது செய்யப்பட்டு, அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் வடமதுரை, ராக்கிபாளையம் பிரிவு, ஜி.என்.மில்ஸ் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சிலர் சாலையில் படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 100 பேர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
காரமடை ஐந்து முக்கு சாலையில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சிவபுகழ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 60 பேர் கைது செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையத்தில் மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமையில், பங்களாமேடு சிக்ஸ்கார்னரில் சாலை மறியலில் ஈடுபட்ட ராஜ்மோகன், பிரகாஷ், கார்த்தி, ரங்கநாதன், காளியப்பன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அனுப்பினர்.
அன்னூர் ஒன்றிய நகர இந்து முன்னணியினர் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் குட்டி (எ) ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடக்கு ஒன்றிய தலைவர் கார்த்தி, தெற்கு ஒன்றிய தலைவர் மாரப்பன், நகர தலைவர் கார்த்தி உள்பட 12 பேரை அன்னூர் போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 227 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story