ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் விடிய- விடிய சோதனை


ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் விடிய- விடிய சோதனை
x
தினத்தந்தி 24 March 2018 4:30 AM IST (Updated: 24 March 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி சோதனை ஒரே நேரத்தில் 7 இடங்களில் நடந்தது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் விடிய- விடிய சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியைச் சேர்ந்த வர் ஆர்.பால கிருஷ்ணன். தொழிலதிபரான இவர் ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங் களின் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான பல்வேறு தொழில் நிறுவனங் கள், குடோன்கள், திருமண மண்டபம் போன்றவை எறும் புக்காடு, ராஜாக்கமங்கலம், ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ளன.

இந்தநிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் திடீரென வருமான வரித்துறை நாகர் கோவில் இணை ஆணையர் ஜெயராம் தலைமையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங் களை சேர்ந்த சுமார் 45 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்க ளில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை ராஜாக்கமங்கலம், எறும்புக் காடு, ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், குடோன், திருமண மண்டபங்கள் ஆகிய வற்றிலும், பொன்னப்பநாடார் காலனியில் உள்ள வீட்டிலும் ஆக மொத்தம் 7 இடங்களில் நடந்தது. இந்த சோதனை நேற்று அதிகாலை 3 மணி வரை விடிய- விடிய 15 மணி நேரம் நடைபெற்றது.

சோதனையின்போது ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறு வனங்களின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங் களை சோதனை செய்ததாக கூறப் படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வீடுகள், நிறுவனங்களில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின் றனர்.

அதன் தொடர்ச்சியாக ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங் களிலும் புகார் களின் அடிப்படையில் சோ தனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story