விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும் என புதிய கோர்ட்டுகள் திறப்பு விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
நாகர்கோவில்,
“குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும்” என்று நாகர்கோவிலில் நடந்த புதிய கோர்ட்டுகள் திறப்பு விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
நாகர்கோவில் கோர்ட்டில் கூடுதல் மாவட்ட கோர்ட்டு (விரைவு கோர்ட்டு), குடும்பநல கோர்ட்டு, கூடுதல் மகிளா கோர்ட்டு, தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கோர்ட்டில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, இரணியலில் விரைவு கோர்ட்டு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் திறப்பு விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.கருப்பையா வரவேற்றுப் பேசினார். பொதுப்பணித்துறை திருநெல்வேலி கண்காணிப்பு பொறியாளர் ஆசைத்தம்பி திட்ட அறிக்கை வாசித்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா சிறப்புரையாற்றினார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குத்துவிளக்கேற்றி, புதிய கோர்ட்டுகளின் திறப்பு விழா கல்வெட்டுகளை திறந்து வைத்தார். இதே போல் இரணியலில் கூடுதல் மாவட்ட முன்சிப் குடியிருப்பையும் திறந்து வைத்தார்.
ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜே.நிஷாபானு, என்.சேஷசாயி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தமிழக சட்ட துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:-
குமரி மாவட்டம் பல சிறப்புகள் வாய்ந்த மாவட்டமாகும். கற்றவர்கள் நிறைந்த மாவட்டம். கன்னியாகுமரியில்தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கர்மயோகி விவேகானந்தர் வந்து தவம் செய்தார். அவர் தவம் செய்த புண்ணிய பூமிக்கு நான் வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
நாம் அடைய நினைக்கும் இலக்கை அல்லது குறிக்கோளை அடையும் வரையில் முயற்சிகளை கைவிடக்கூடாது என்று விவேகானந்தர் கூறினார். அவர் ஆண்களும், பெண்களும் சமமானவர்கள் என்றும் கூறினார்.
குமரி மாவட்டத்தில் 5 புதிய கோர்ட்டுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கோர்ட்டுகள் கோவில்கள் போன்றவை. அவை புனிதம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும். கோர்ட்டுகள் பொதுமக்களுக்கும், வழக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றன. வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம்தான். அதேநேரத்தில் விரைவாக வழங்கப்படும் தீர்ப்புகள் தரமானதாக இருக்க வேண்டும். இதில் நீதிபதிகள் பங்கு மட்டும் முக்கியமானதல்ல. வக்கீல்களின் பங்கும் முக்கியமானது. வக்கீல்கள் எடுத்து வைக்கும் பிரதான வாதங்கள் மூலம்தான் தீர்ப்புகளை வழங்க முடியும். காலதாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். சாதாரண பொதுமக்கள் எளிதில் நீதிமன்றங்களை நாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது மட்டும் முக்கியம் அல்ல. விரைவாக நீதி கிடைக்கச் செய்வதும் மிகவும் முக்கியம்.
இங்கு குடும்ப நல கோர்ட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குடும்பநல கோர்ட்டுக்கு வரும் பெரும்பாலான வழக்கு களுக்கு, குடும்பத்தினரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுதான் காரணமாக இருக் கிறது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும்.
இம்மாதிரியான வழக்குகளில் வாதாடும் வக்கீல்கள் 2 பேரையும் சமரச தீர்வு மையம் மூலம் பேசி சுமூகமாக முடித்து வைக்க முன்வரவேண்டும். எனவே இதில் வக்கீல்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது.
இவ்வாறு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார். அவர் தனது உரையைத் தொடங்கியதும் காலை வணக்கம் என்றும், நிறைவு செய்யும் போது நன்றி, வாழ்த்துக்கள் என்றும் தமிழில் கூறியது குறிப்பிடத்தக்கது.
முடிவில் குமரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி முருகானந்தம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக குமரி மாவட்ட கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் மகேஷ், செயலாளர் மரிய ஸ்டீபன், வக்கீல் சங்க தலைவர்கள் சுரேஷ் (குழித்துறை), மத்தியாஸ் (பத்மநாபபுரம்), புஷ்பதாஸ் (இரணியல்), பலவேசமுத்து (பூதப்பாண்டி) ஆகியோர் பேசினார்கள்.
விழாவில் நாகர்கோவில், குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல், பூதப்பாண்டி கோர்ட்டுகளின் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர், மாவட்ட அரசு வக்கீல் சந்தோஷ்குமார், வக்கீல்கள் குரூஸ் செலின்ராணி, கனகராஜ், அகஸ்டின், விக்னேஷ், ஆசிக், லட்சுமிகாந்த், ஆன்றோபிரின்ஸ், மீனாட்சி மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story