களக்காடு அருகே விபத்து: இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் உள்பட 2 பேர் பலி மொபட் மீது மினிபஸ் மோதியது


களக்காடு அருகே விபத்து: இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் உள்பட 2 பேர் பலி மொபட் மீது மினிபஸ் மோதியது
x
தினத்தந்தி 25 March 2018 2:30 AM IST (Updated: 24 March 2018 7:22 PM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே மினி பஸ்சும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

களக்காடு,

களக்காடு அருகே மினி பஸ்சும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மினி பஸ்–மொபட் மோதல்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை குண்டேந்திரம் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 70). இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் களக்காடு ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்து வந்த அவர், பெட்டிக்கடையும் வைத்திருந்தார். நேற்று மதியம் சண்முகவேல் பொருட்கள் வாங்குவதற்காக தனது மொபட்டில், அதே ஊரை சார்ந்த சமுத்திரவேலு (45) என்பவருடன் களக்காட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

கீழப்பத்தை–மேலக்கருவேலங்குளம் ரோட்டில் அவர்கள் சென்றபோது எதிரே மஞ்சுவிளைக்கு வந்த தனியார் மினிபஸ் திடீரென மொபட் மீது மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் சண்முகவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், களக்காடு இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சண்முகவேல் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த சமுத்திரவேலுவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சமுத்திரவேலுவும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி பஸ் டிரைவர் பத்மநேரியை சேர்ந்த இசக்கிராஜ் (40) என்பவரை கைது செய்தனர்.

Next Story