தனித்தனி விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உள்பட 2 பேர் பலி
விழுப்புரம் அருகே தனித்தனி விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா இலப்பதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 38), இவர் சம்பவத்தன்று பண்ருட்டியில் இருந்து திருக்கோவிலூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
சரவணம்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தொரவியில் இருந்து திருக்கனூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வெட்டுக்காடு என்ற இடத்தில் செல்லும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
Related Tags :
Next Story