காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்தின் உரிமை பெற்றுத்தரப்படும் - எச்.ராஜா பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்தின் உரிமை நிச்சயம் பெற்றுத்தரப்படும் என்று திண்டுக்கல்லில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பழனிக்கு சென்றார். அவருக்கு திண்டுக்கல் நல்லாம்பட்டி பிரிவில் பா.ஜ.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் வேல்சங்கம நிகழ்ச்சியையொட்டி, ஆன்மிகத்தாலும், தமிழாலும் தமிழக மக்களை இணைக்கும் விதத்தில் இன்று (நேற்று) 6 ரத யாத்திரைகள் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் வலம் வரும். இந்த ரதங்களில் 1,008 கிலோ எடை கொண்ட வெள்ளி வேல் பக்தர்களின் பூஜைக்காக வைக்கப்படும்.
ரதங்கள் வருகிற 29-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தடையும். 30-ந்தேதி ரதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்த ரதயாத்திரை மக்களிடையே மிகுந்த எழுச்சியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும். தமிழகத்தில் நடந்த ராம ராஜ்ய ரதயாத்திரையால் எந்த பிரச்சினையும் இல்லை. தீய சக்திகளால் சட்டமன்றத்துக்குள் மட்டுமே கலவரம் ஏற்பட்டது.
விநாயகர் சிலையை உடைத்த, ராமர் படத்தை அவமதித்த இந்து விரோத கட்சிகள் தான் சட்டமன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தினர். இந்து மத ரதயாத்திரைகளால் தமிழகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் தமிழக கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நரசிம்மசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளது. கோவையில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. கோவில் கொள்ளைகளை வெளிக்கொண்டு வருவதால் தி.மு.க.வினர் என் மீது குறி வைக்கின்றனர்.
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஈ.வே.ரா. கூறியதாக சொல்வது புதியதா?. 1968-ம் ஆண்டு அவர் பேசும்போது, நான் 40 வருடங்களாக தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி வருகிறேன் என்றார். இப்போது அதனை எல்லோரும் ஆதாரத்துடன் விவாதிக்கின்றனர். இதனை வெளிப்படுத்தும்போது அதற்கு நான் தான் காரணம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை தீர்ப்பில் உபயோகப்படுத்தவில்லை. நிச்சயமாக, தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய உரிமை பெற்றுத்தரப்படும். தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக காயப்போட்டவர்கள், 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், தமிழகத்தின் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கை கருணாநிதி தலைமையிலான அரசு வாபஸ் பெற்றது.
அந்த ஆண்டு மைசூரூக்கும், மெட்ராஸ் மாகாணத்துக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் அணை கட்டினால் கர்நாடகத்திடமும், கர்நாடகத்தில் அணை கட்டினால் தமிழகத்திடமும் அனுமதி பெற வேண்டும். ஆனால் தமிழகத்தில் அணை கட்டவில்லை.
கர்நாடகத்தில் அணை கட்டும்போது, அவர்களுடைய தேவைக்காக அங்கு அணை கட்டுகிறார்கள் என்று சட்டசபையில் கருணாநிதி பேசினார். அவர்கள் செய்த துரோகத்தை மூடி மறைப்பதற்காக கூச்சல் போடுகின்றனர். இதனை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக தேர்தலை மனதில் வைத்து தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு வேஷம் போடுகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது, யார் வேஷம் போடுகிறார்கள், போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும், என்றார்.
இதையடுத்து அவர் பழனி சென்றார். பழனியில் நேற்று மாலை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் வேல் சங்கம ரதயாத்திரை 6 வேல்களுடன் நேற்று தொடங்கியது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனரே?
பதில்:- மற்ற கட்சி விவகாரத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
கேள்வி:- காவிரி பிரச்சினையில் விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட முடிவு செய்துள்ளனரே?
பதில்:- காவிரி பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே விவசாயிகள் போராட வேண்டிய அவசியம் இல்லை. விளம்பரத்துக்காக யாரேனும் போராட விரும்பினால் போராடலாம்.
கேள்வி:- கோவிலில் உள்ள கடைகளை அகற்றுவது குறித்து உங்கள் கருத்து?
பதில்:- வழிபாட்டு தலங்கள் பக்தர்கள் வழிபடுவதற்காக மட்டுமே. அது வணிக வளாகம் அல்ல. எனவே கோவில்களில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்படவேண்டும். கோர்ட்டு உத்தரவை அறநிலையத்துறை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

Related Tags :
Next Story