ஜல்லிக்கட்டை போல காவிரி விவகாரத்தில் போராட்டம் நடைபெற வேண்டும் சரத்குமார் பேச்சு
ஜல்லிக்கட்டை போல காவிரி விவகாரத்தில் போராட்டம் நடைபெற வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
கரூர்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்பு விழிப்புணர்வு ஊர்வலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு கரூர் வந்தது. கரூர் அருகே நொய்யலில் இருந்து நேற்று காலை மீண்டும் ஊர்வலம் தொடங்கியது. கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கரூர் பஸ் நிலையம் அருகே ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு திறந்த வேனில் நின்றபடி சரத்குமார் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி பிரச்சினை டெல்டா மாவட்ட பகுதி பிரச்சினை இல்லை. தமிழகத்தின் பிரச்சினை. தமிழர்களின் உரிமை பிரச்சினை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கால கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் 9 பேர் கொண்ட குழுவை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கெடு முடியப்போகிற நேரத்தில் தமிழக மக்கள் எந்த மாதிரி அழுத்தத்தை தருவார்கள் என எண்ணி ஒரு கண்துடைப்பு குழுவை அமைத்திருக்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தத்தை தர வேண்டிய நிலையில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெற வேண்டும். ஜல்லிக்கட்டை போல போராட்டம் நடைபெற வேண்டும். காவிரி நதி நீருக்கு அமைதி புரட்சி தேவைப்படுகிறது.
காவிரியை மீட்போம், காவிரி நமது உரிமை, விவசாயிகளை காப்போம் என தினமும் வீட்டு முன்பு பதாகை எழுதி வையுங்கள். காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதல்-அமைச்சர் மனு கொடுத்திருந்தார். ஆனால் பிரதமருக்கு யாரையும் சந்திக்க நேரமில்லை. அவர் உலக தலைவர்களை மட்டும் சந்திக்க நேரம் உள்ளது.
இந்தியாவில் நடப்பது அவருக்கு தெரிய வேண்டும். பொருளாதாரத்தில் நாடு உயர்ந்தாலும், விவசாயம் அழிந்து விட்டால் தங்க தட்டு இருந்தும், உண்ண உணவு இல்லாத சூழல் தான் தமிழகத்திற்கு வர இருக்கிறது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தண்ணீரை தமிழகத்திற்கு பகிர்ந்து வழங்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். தமிழக எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தத்தை தர வேண்டும். காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் போராடி வெற்றி பெற்று தந்தார்கள் என்ற ஒரு முடிவு இருக்க வேண்டும்.
உலகில் ஓடும் நதிகளை பல நாடுகள் பங்கிட்டுகொள்கிறது. சிந்து, பிரம்மபுத்திரா நதிகள் கூட பங்கிடப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் அண்டை மாநிலமான கர்நாடகம் காவிரி தண்ணீரை பகிர்ந்து வழங்க மறுக்கிறது. இதில் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து அவர் திருமாநிலையூரில் ஒருவரது வீட்டில் தேனீர் அருந்தினார். டிராக்டர் ஓட்டிச்சென்ற விவசாயிக்கு சரத்குமார் சால்வை அணிவித்து கவுரவித்தார். தான்தோன்றிமலையில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசினார். அதன்பின் ஊர்வலம் தோகைமலை, குளித்தலை நோக்கி சென்றது. குளித்தலையில் சரத்குமார் பேசினார். ஊர்வலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலாடுதுறையில் முடிவடைகிறது.

Related Tags :
Next Story