சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
‘ஹூண்டாய்’ நிறுவனம் – போக்குவரத்து போலீசார் சார்பில் சென்னை அண்ணாநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சென்னை,
‘ஹூண்டாய்’ கார் நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன்’, சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சென்னை அண்ணாநகரில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியில் ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன்’ அறங்காவலர்கள் ஸ்டீபன் சுதாகர், கணேஷ் மணி, மேலாளர் ஸ்ரீதர், முன்னாள் நிர்வாகி கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துணை கமிஷனர் ஈஸ்வரன் பங்கேற்று, மாநகர பஸ் மற்றும் ஆட்டோக்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ‘ஸ்டிக்கர்’களை ஒட்டினார். அதனைத்தொடர்ந்து அண்ணாநகரில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்தும் பெறப்பட்டது.
இதுகுறித்து ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன்’ அறங்காவலர் ஸ்டீபன் சுதாகர் கூறியதாவது.
அண்ணாநகரில் வீடு வீடாக சென்று விபத்துகள் குறித்து விழிப்புணர்வு அளிக்க உள்ளோம். பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கையேடு கொடுக்க உள்ளோம். விபத்துகள் நடக்கும் பகுதிக்கு விரைந்து செல்லும் வகையில் 25 பேர் கொண்ட குழுவும், முதலுதவி சிகிச்சைக்கு 100 தன்னார்வலர்கள் கொண்ட குழுவும் ஈடுபட உள்ளது. விபத்தில் உறவினரை பறிகொடுத்தோரின் உருக்கமான பேட்டிகளை வீடியோ தொகுப்பாக திரையிட உள்ளோம்.
ரூ.3½ கோடி செலவில் அண்ணாநகரில் 63 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளது. விதிகளை மீறி செல்லும் வாகனங்களின் எண்களை இந்த கேமராக்கள் உடனடியாக பதிவு செய்யும். இதற்காக தனி கட்டுப்பாட்டு அறையும் அமைய உள்ளது. அண்ணாநகரை ஒரு பாதுகாப்பான பகுதியாக மாற்ற உள்ளோம். இந்த முயற்சி சென்னையின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் அடையும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அண்ணாநகர் போக்குவரத்து பணிமனை மேலாளர் ரவிகுமார், வணிக சங்க நிர்வாகிகள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story