ஆந்திர பெண்ணிடம் நகையை பறித்த 2 பேர் கைது போலீஸ்காரர் மீது தாக்குதல்


ஆந்திர பெண்ணிடம் நகையை பறித்த 2 பேர் கைது போலீஸ்காரர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 25 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

உறவினரை பார்க்க சென்னை வந்த ஆந்திர பெண்ணிடம் நகையை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிக்க முயன்ற போது போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.

சென்னை,

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நாகமணி(வயது 30). இவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் வந்தார். புரசைவாக்கம் லே டாங்ஸ் சாலை வழியாக அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், நாகமணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்தனர். செல்போனையும் அபகரித்து சென்றனர்.

இதனை அந்த வழியாக பணிக்கு சென்று கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் விஜயகுமார் கவனித்தார். உடனடியாக தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை துரத்தி சென்றார்.

எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் அருகே 2 பேரையும் விஜயகுமார் மடக்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர் பிளேடால் விஜயகுமாரை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் மட்டும் சிக்கினார். அவர் வேப்பேரி போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் அவர் புதுப்பேட்டை சாலையோரத்தில் வசிக்கும் ஹரிகுமார் என்பவருடைய மகன் அருண்(19) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய நபர் புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்த முகமது நாசர் என்பவருடைய மகன் ஆரூண் ரஷீத்(19) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வேப்பேரி போலீசார் அவரையும் கைது செய்தனர்.

காயமடைந்த போலீஸ்காரர் விஜயகுமார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார்.

Next Story