சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணிப்பேன்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலன் அறிவிப்பு
சட்டசபையில் கவர்னர் உரையை புறக்கணிப்பேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவை சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் கவர்னர் கிரண்பெடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். சட்டசபையில் கவர்னர் உரையாற்றுவதால் புதுச்சேரி எந்தவித முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்பும் இல்லை. எனவே ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்ற வேண்டும் என்ற மரபை தவறாக பயன்படுத்தக்கூடாது. கவர்னர் உரையை புறக்கணிக்கிறேன். மேலும் இது தொடர்பாக தொகுதி மக்களின் கருத்தை கேட்டு கட்சியின் தலைமைக்கு தெரிவிப்பேன்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25, 26 தேதிகளில் எனது தொகுதியில் உள்ள அரும்பார்த்தபுரம் தக்க குட்டையில் கவர்னர் கிரண்பெடி கள ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்து, விளம்பரம் தேடும் வகையில் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். ஆனால் அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கவர்னர் ஆய்வின்போது அந்த இடம் எப்படி இருந்ததோ, அதுபோல்தான் தற்போதும் உள்ளது. இதுபோன்ற கவர்னரின் வெற்று அரசியலை நான் விரும்பவில்லை.
என் தொகுதி மக்களுக்கு ஓய்வூதியம் பெற்றுத்தர முடியவில்லை, ஆதிதிராவிட மக்களுக்கு சிறப்புக்கூறு நிதி திட்டத்தில் நலத்திட்டங்களை பெற்றுத்தர முடியவில்லை, பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி கேட்டேன் தரவில்லை. கடந்த சில மாதங்கள் முன்புவரை அரசு நிர்வாகம் சரியாக இல்லை என கூறிவந்த கவர்னர் கிரண்பெடி தற்போது அமைச்சர்களை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்கிறார்.
கவர்னர் அலுவலகத்தில் 25-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு நிறுவனங்களில் இருந்து சென்று மாற்றுப்பணி ஆற்றி வருகின்றனர். இவர்களுக்கு அந்த அரசு நிறுவனங்களில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. அதனால் அந்த அரசு நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்டும். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.1 கோடிக்கு மேல் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது.
கவர்னர் இலவசங்கள் கூடாது எனக்கூறி இலவச அரிசிக்கு தடையாக இருந்து வருகின்றார். கவர்னர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றார். இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story