புதுவையில் ஜாமீனில் வந்தவர் கொலையில் 10 பேர் கைது: மாணவியின் சாவுக்கு காரணமாக இருந்ததால் பழி தீர்த்ததாக வாக்குமூலம்
புதுவையில் ஜாமீனில் வந்தவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை திலாசுபேட்டை கருணாஜோதி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ஜாக்கி என்கிற சரவணன்(வயது 19). இவர் மீது வழிப்பறி, ஆயுதம் வைத்திருத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து விட்டு சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதன்படி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் வழுதாவூர் சாலையில் உள்ள ஒரு கடையின் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. உடனே அவர் தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது காமராஜர் நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் உத்தரவின் பேரில் கொலையாளிகளை கைது செய்ய சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன், கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
போலீசாரால் தேடப்பட்ட கொலையாளிகள் அனை வரும் ஆலங்குப்பம் பகுதியில் ஒரு ஏரிக்கரையில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட உடன் தப்பி ஓட முயன்ற அவர்களை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், ஆனஸ்ட் ராஜ், காமராஜ் நகரைச் சேர்ந்த அன்பு, சூர்யமூர்த்தி, மணிகண்டன், குண்டுபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார், விக்னேஷ், அஜித்குமார், ஜிப்மர் குடியிருப்பைச் சேர்ந்த ரூபன், தர்மா மற்றும் 17 வயது சிறுவன் என 10 பேரும் சேர்ந்து சரவணனை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது சரவணன் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதுபற்றி போலீசார் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-
ஆனஸ்ட்ராஜின் தங்கை கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவரை ஜாக்கி என்ற சரவணன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ஏற்க மறுத்து விட்ட நிலையில் மாணவியை அடிக்கடி வழிமறித்து தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த ஆண்டு அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அவரது அண்ணன் ஆனஸ்ட்ராஜ் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினம் வர இருப்பதையொட்டி பேனர் வைப்பதற்காக அந்த மாணவியின் புகைப்படத்தை அவரது அண்ணன் ஆனஸ்ட் ராஜிடமே சரவணன் கேட்டுள்ளார். இது அவருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தங்கை சாவிற்கு காரணமாக இருந்ததுடன், அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்த புகைப்படம் கேட்டு தொந்தரவு செய்கிறானே என ஆத்திரமடைந்த ஆனஸ்ட்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சரவணனை கொல்ல திட்டம் தீட்டினார். இதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து கடந்த சில நாட்களாக சரவணனின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வரும் போது கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்குள் ஓடி பதுங்கியதால் சரவணன் தப்பினார்.
ஆனால் தொடர்ந்து அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆனஸ்ட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கண்காணித்து வந்துள்ளனர். இந்த முறை தப்பி விடக் கூடாது என்பதற்காக அவர்கள் 2 பிரிவாக பிரிந்து செயல்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சரவணனை பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். ஒரு மதுக்கடையில் மது குடித்து விட்டு வந்த அங்கு வைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் நிலைமை சரி இல்லாததால் அங்கு வைத்த குறி தப்பியது. தொடர்ந்து அந்த கும்பல் அவரை கண்காணித்து வந்தது.
வழுதாவூர் சாலை காந்தி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட போது சுற்றி வளைத்து சரவணனை வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதில் அவர் தப்பி விட்டால் மற்றொரு இடத்தில் வைத்து கொலை செய்ய இன்னொரு கும்பல் தயாராக இருந்துள்ளது.
ஆனால் அதற்கு தேவை ஏற்படாத நிலையில் கொலை கும்பலைச் சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலங்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் பதுங்கி இருந்துள்ளனர். அப்போது தான் அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜோஸ்வா, சாந்தகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆனஸ்ட் ராஜ் மீது கோரிமேடு, ஆரோவில் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story