நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 3 அமைச்சர்கள் பங்கேற்பு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கல்பூங்காவில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா வரவேற்று பேசினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
மாணவ, மாணவிகளுக்கு பரிசு
பின்னர் உலக வனநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய வனத்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை அமைச்சர்கள் வழங்கினர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story