செய்யாறு அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் காசநோய் கண்டறியும் கருவி


செய்யாறு அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் காசநோய் கண்டறியும் கருவி
x
தினத்தந்தி 25 March 2018 4:45 AM IST (Updated: 25 March 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சத்தில் காசநோய் கண்டறியும் கருவி அமைச்சர் தொடங்கி வைத்தார்.

செய்யாறு,

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் தொடங்கப்பட்டு நவீன கருவிகள் கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவசர மருத்துவ சேவை பிரிவு மற்றும் காசநோய் விரைந்து கண்டறிந்து சிகிச்சை அளிக்க புதிதாக ரூ.25 லட்சம் மதிப்பில் 2 மணி நேரத்தில் காசநோய் கண்டறியும் கருவி சேவை தொடக்க விழா நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி சேவல் வி.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., சுகாதார இணை இயக்குனர் பிரபுராஜ், காசநோய் பிரிவு துணை இயக்குனர் அசோக், சுகாதார துணை இயக்குனர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு காசநோய் விரைவாக கண்டறியும் பிரிவு மற்றும் அவசர மருத்துவ சேவை பிரிவினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பாண்டியன், டாக்டர்கள் செந்தில்குமார், பாலாஜி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், பி.லோகநாதன், எம்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story