பெண்களுக்கான வேலை வாய்ப்பு - (கறவை மாடு வளர்ப்பு - 3)
நாள் ஒன்றுக்கு ஒரு கறவை மாட்டிற்கு 1.5 கிலோ கலப்பு தீவனம் தேவைப்படும். தினசரி சுமார் 2.5 லிட்டர் பால் கொடுக்கும் கறவை பசுக்கு இது போதுமானது.
நாள் ஒன்றுக்கு ஒரு கறவை மாட்டிற்கு 1.5 கிலோ கலப்பு தீவனம் தேவைப்படும். தினசரி சுமார் 2.5 லிட்டர் பால் கொடுக்கும் கறவை பசுக்கு இது போதுமானது. அதற்கு மேல் பால் தரும் மாடுகளுக்கு, அதற்கு ஏற்றபடி கூடுதலாக வழங்கவேண்டும். சினை மாடுகளை பொறுத்தவரையில், அதன் கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காக ஏழுமாத சினை முதல் உடல் பராமரிப்புக்கும், பால் உற்பத்திக்கும் கொடுக்கப்படும் தீவன கலவையுடன் 1 கிலோ முதல் 1.5 கிலோ தீவனம் கூடுதலாக கொடுக்கவேண்டும்.
தாதுச்சத்து மூலப்பொருட்கள்
தாதுச்சத்து கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால் உற்பத்திக்கும், சினை காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் தேவைப்படுகின்றன. பால் வற்றிய மாடுகளுக்கும், சினை மாடுகளுக்கும் தாது உப்பு கலவையை அவசியம் அளிக்க வேண்டும். கலப்பு தீவனம் கொடுக்காமல் தவிடு, புண்ணாக்கு, பொட்டு தானியங்களை பயன்படுத்தும் கால்நடை வளர்ப்போர் தினமும் 30 முதல் 50 கிராம் வரை தாது உப்பு கலவையை கொடுக்க வேண்டும். அதாவது கன்றுகளுக்கு 5 கிராம், காளைகளுக்கு 30 கிராம், சினைப்பசுவுக்கு 40 கிராம், பால் கறக்கும் பசுவுக்கு 50 கிராம் என்ற அளவில் கொடுக்க வேண்டும். இந்த தாது உப்பு கலவையோடு தினசரி 30 கிராம் முதல் 50 கிராம் சாப்பாட்டு உப்பையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இதனால், பால் உற்பத்தி கணிசமாக கூடும்.
தாது உப்பு கலவையின் நன்மைகள்
கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலவையானது உடல் வளர்ச்சி, பால் உற்பத்தியை கொடுக்கிறது. மேலும் பாலில் கொழுப்பு இல்லாத திட பொருட்களின் அளவு அதிகரிக்கிறது. கன்றுகள் வேகமாக வளர்ச்சியடைந்து பருவத்துக்கு வருவதற்கு ஏதுவாகிறது. அத்துடன் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய் தாக்குதல் குறைவதுடன், பொருளாதார இழப்பும் தவிர்க்கப்படுகிறது. சினைப்பருவமின்மை, கரு தங்காமை, கருச்சிதைவு, நஞ்சுக்கொடி தங்கிவிடுதல் போன்ற இனப்பெருக்க கோளாறுகள் ஏற்படுவது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. கால்நடைகளின் உற்பத்தி திறன், இனப்பெருக்க திறனை மேம்படுத்த தாது உப்பு கலவையை கண்டிப்பாக அனைத்து கால்நடைகளுக்கும் அளிக்க வேண்டும்.
தீவனம் அளிக்கும் முறை
பண்ணையில் பொதுவாக கறவை மாடுகளுக்கு முதலில் கலப்பு தீவனத்தையும், பின்னர் பசுந்தீவனத்தையும் அதற்கு அடுத்தபடியாக வைக்கோல், காய்ந்த புல்லையும் கொடுக்கலாம். அடர் தீவன கலவையை ஊறவைத்தோ, அளவாக தண்ணீர் சேர்த்தோ கொடுக்கலாம். தீவன தட்டைகளை நறுக்கி துண்டாக்கி அளிக்க வேண்டும். அளிக்கப்படும் தீவன வகைகளில் திடீரென மாற்றம் செய்வது நல்லதல்ல.
பண்ணையாளர்கள் பசுந்தீவன பயிர்களை குறிப்பாக பயறு வகை தீவனங்களை வளர்த்தும் உள்ளூர் சந்தையில் கிடைக்க கூடிய புண்ணாக்கு, தவிடு, பொட்டு, தாது உப்பு கலவையை தரத்திற்கு ஏற்ப தகுந்த விலைக்கு வாங்கி வீட்டிலேயே அடர் தீவன கலவையாக தயாரித்தும் தரமான தீவனங்களை மாடுகளுக்கு வழங்கலாம். இதனால் இனவிருத்தி திறனை மேம்படுத்த முடியும்
கோடை கால பராமரிப்பு
தமிழகத்தில் பெரும்பாலும் ஜெர்ஸி, ஹால்ஸ்டீன் பிரீசியன் ஆகிய கலப்பின மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கோடை காலத்தில் அதிக வெப்பத்தாக்கத்தின் காரணமாக மாடுகளின் உடல் வெப்ப நிலை உயர்ந்து சோர்வு ஏற்படும். இதனால் குறைந்த அளவே தீவனம் உட்கொள்ளும். பால் கறக்கும் தன்மையும், சினைப் பிடிக்கும் திறனும், உடல் வளர்ச்சியும் குறைந்து விடும். வெப்ப சோர்வால் பால் உற்பத்தி திறன் 20 சதவீதமும், சினை பிடிக்கும் தன்மை 10 முதல் 20 சதவீதமும் குறையும். இதை தவிர்க்க பண்ணையை சுற்றிலும் நிழல் தரும் மரங்களை வளர்த்து, காற்றோட்ட வசதிகள் செய்து வெப்பத்தை குறைக்கவேண்டும். தீவன முறைகளையும் சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி மாற்றவேண்டும்.
கால்நடை வளர்ப்பில் இனப்பெருக்க மேலாண்மை முக்கியமானது. கிடாரிகள் குறிப்பிட்ட பருவத்தை அடைந்ததும் அவைகளின் இனப்பெருக்க உறுப்புகள் செயல்பட தொடங்குகின்றன. மாட்டின் உடலில் இருக்கும் பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் நீர் அதன் மூளை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். நாட்டு இன கிடாரிகள் சுமார் 24 மாதத்திலும், கலப்பின கிடாரிகள் அவைகளின் இனத்தைப் பொருத்து 8 முதல் 18 மாதங்களிலும் பருவமடைகின்றன. அதாவது தாயின் எடையில் 75 சதவீதத்தை அடையும் போது பருவமடையும்.
பருவமடைதலை பாதிக்கும் காரணிகள்
மரபணுக்கள், பருவடையும் வயதில் உள்ள பருவநிலை மாற்றங்கள், கிடாரிகளின் உடல் வளர்ச்சி, தீவன முறை, சுரப்பு நீரில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை பருவமடைதலை பாதிக்கும் காரணிகளாகும். பொதுவாக பசு 8 முதல் 18 மாதங்களில் பருவ வயதை அடைந்து சினைப்பருவ சுழற்சி மற்றும் சினைப்பருவ தருணத்தை வெளிப்படுத்தத் தொடங்கிவிடும். அவைகளுக்கு முறையான, சத்தான தீவனம் கிடைக்கவில்லை என்றால், அதன் பருவமடையும் தன்மை பாதிக்கப்படும். அதனால் தீவனம் புரத சத்து மிகுந்ததாகவும், தேவையான எரிசக்தி, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைவான உணவை கொடுத்தால் சினைப்பருவ காலத்தை எட்டுவதில் தாமதம் ஏற்படும். பசு மாடுகளை காளை மாடுகளுடன் சேர்த்து வளர்த்தால் அவை விரைவாக பருவவயதை எட்டிவிடும். மேலும் சரியான இடைவெளிகளில் குடற்புழு நீக்கம் போன்ற பராமரிப்பு முறைகளை கையாண்டால் கிடாரிகள் விரைவாக இனப்பெருக்கத்திற்கு தயாராகும்.
சினைப்பருவ சுழற்சி
மாடுகள் இனப்பெருக்கத்துக்கான பருவத்தை அடைந்த பிறகு அவைகளின் பாலின நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும். இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு. பருவமடைந்த பசுக்கள் 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைத்தருண அறிகுறிகளை வெளிப்படுத்தும். முதல் சினைப் பருவத்திற்கும் அடுத்த சினைப்பருவத்திற்கும் இடைப்பட்ட நிகழ்வுகளையே சினைப்பருவ சுழற்சி என்கிறோம். இந்த சினைப்பருவ சுழற்சி அளவானது அந்த ஆண்டின் பருவ காலம், தீவனம், வயது மற்றும் உடல் அமைப்பை பொருத்து மாறுபடும்.
சினைப்பருவ அறிகுறிகள்
பசுக்களின் சினைப்பருவம் 18 முதல் 24 மணி நேரம் வரை இருக்கும். இந்த பருவத்தில் பசுக்கள் காளை மற்றும் மற்ற மாட்டினை தன் மீது தாவ அனுமதிக்கும். அதாவது அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் என்கிற கண நீரும், குறைந்த அளவு புரோஜெஸ்டிரான் கண நீரும் மூளையின் மீது செயல்பட்டு இந்த சினைப்பருவ தூண்டுதலை வெளிப்படுத்தும். அப்போது மாடுகள் அமைதியின்றி காணப்படும், அடிக்கடி நீண்ட ஒலி எழுப்பும், அருகில் உள்ள மாடுகள் மீது தாவுவதோடு, மற்ற மாடுகளை தன் மீது தாவவும் அனுமதிக்கும். தீவனத்தின் மீது நாட்டம் இல்லாமல், அதை உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். அடிக்கடி சிறுநீர் கழித்து கொண்டு இருப்பதுடன், பாலின் அளவும் குறைந்துவிடும். அதன் உடல் வெப்பநிலை அதிகரித்திருக்கும்.
செயற்கை முறை கருவூட்டல்
நல்ல ஆரோக்கியமான பசுக்கள் கூட சில சமயங்களில் செயற்கை முறை கருவூட்டலில் சினையுறாமல் போக வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க கருவூட்டலுக்கான சரியான தருணம், வயது, கருவூட்டல் செய்யப்படும் நேரம் போன்ற அனைத்தையும் கவனிக்க வேண்டும். பசுக்களின் சினை தருண அறிகுறிகள் தொடங்கியவுடனோ அல்லது அதிகம் தாமதித்தோ கருவூட்டல் செய்யக்கூடாது. சினை தருண அறிகுறிகள் தொடங்கிய 8 முதல் 10 மணி நேரம் கழித்த பின்னர் கருவூட்டல் செய்தால் அவை சினைப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கிடாரிகளுக்கு கருவூட்டல் செய்யும் போது அதன் வயது, உடல் எடையையும் கணக்கிட வேண்டும்.
கருவூட்டல் செய்யப்படும் நேரம்
சினை பருவமடைந்த பசுக்களை வெப்பம் குறைந்த நேரத்தில் கருவூட்டல் செய்யவேண்டும். எனவே அதிகாலையிலோ அல்லது மாலையிலோ கருவூட்டல் செய்ய வேண்டும். அமாவாசை மற்றும் பவுர்ணமி காலங்களில் மட்டும் கால்நடைகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப் படுத்துகின்றன என்கிற தவறான கருத்துகள் சிலரிடம் உள்ளன. ஆரோக்கியமான கால்நடைகள் 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவத்தை வெளிப்படுத்தும்.
கருவூட்டல் செய்யும் பசுக்களை அமைதியான முறையில் கையாள வேண்டும். அவற்றை அடிக்கவோ, வேகமாக ஓட்டியோ செல்லக்கூடாது. கருவூட்டல் செய்யப்பட்ட பசுக்களுக்கு தீவனம், தண்ணீர் வைப்பதை பகல் முழுவதும் தவிர்த்து விடும் பழக்கம் சிலரிடம் உண்டு. இது தவறானது. இவ்வாறு செய்தால் பசுக்கள் சினை பிடிப்பதில் கட்டாயம் பாதிப்பு ஏற்படும். போதுமான அளவு பசுந்தீவனம் மற்றும் பிற தீவனங்களை வழங்குவதுடன், குளிர்ந்த நீரில் குளிக்க வைப்பது நல்லது. ஆண்டுக்கு ஒரு கன்றை பெற்றால் தான், லாபகரமாக பண்ணை தொழிலை நடத்த முடியும். இதற்கு சினை ஊசி போட்ட மாடுகளை தவறாமல் குறித்த நேரத்தில் சினைப்பார்ப்பது அவசியமாகும். இதனை சினைப் பரிசோதனை என்கிறோம். இது பண்ணை மேலாண்மையில் முக்கிய பங்குவகிக்கிறது.
பராமரிப்பு முறை
கறவை மாடுகள் வளர்ப்பில் சினை பசுக்கள் பராமரிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. சினை மாட்டிற்கு உரிய பராமரிப்பு செய்யவில்லை என்றால் குறைமாத கன்றை ஈனுதல், பால் உற்பத்தி குறைதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு பொருளாதார இழப்பு உருவாகும். எனவே சினை மாடு பராமரிப்பில் உரிய கவனத்தை செலுத்த வேண்டும்.
பசுக்களின் சினைக்காலம் 272 நாட்கள் முதல் 296 நாட்கள். இந்த காலகட்டத்தில் அவற்றை அடித்து துன்புறுத்தவோ, அதிக தூரம் நடக்க செய்யவோகூடாது. சினை மாட்டை ஏழாவது மாதம் முடிந்தவுடன் பால் வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றியவுடன் அதற்கு வழங்கும் தீவனத்தையும் குறைக்க வேண்டும்.
பால் வற்ற செய்வதன் மூலம் வளரும் கருவிற்கு தகுந்த ஊட்ட சத்துக்கள் கிடைக்கும், கறவை மாடுகள் நல்ல உடல் நிலையை அடையும். மடி சரியான விகிதத்தில் சுருங்கி அடுத்த கறவையில் நல்ல செயல் திறன் பெறும். தொற்று நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் மற்ற உணவு மண்டல நோய்கள் ஏற்பாடமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் கன்றுகள் ஈனும் காலத்தில் தாய் பசுக்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கவனித்து, தகுந்த முறையில் பராமரித்திட வேண்டும். அப்போதுதான் தாய் மற்றும் கன்று இறப்பை தவிர்க்க முடியும்.
தீவன மேலாண்மை
கன்றின் வளர்ச்சி தாயின் கருவறையில் இருக்கும் போதே தொடங்கிவிடும். ஏழாவது மாதத்தில் இருந்து அதன் வளர்ச்சி துரிதமடைவதால் தீவனத்தேவையும் அதிகரிக்கும். எனவே சினை மாடுகளுக்கு தினசரி பசுந்தீவனம், உலர் தீவனம் 6 முதல் 8 கிலோ வரையும், உப்பு கலந்த 2 கிலோ அடர் தீவனத்தையும் கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களுக்கு கொடுத்திட வேண்டும். தவிடு அதிகமாக கொடுக்கலாம். பசுந்தீவனத்தின் மூலம் வைட்டமின் ஏ சத்து கிடைக்கும். இது பசுக்களின் கருப்பை மற்றும் பிறப்புறுப்புகளின் திசு வளர்ச்சிக்கும், நஞ்சுக்கொடியின் முதிர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்துக்கும் தேவைப்படும். குடிப்பதற்கு தினமும் சுத்தமான நீரை தேவையான அளவு கொடுத்திட வேண்டும்.
(அடுத்த வாரம்: பால் உற்பத்தி மற்றும் பண்ணை பொருளாதாரம்)
தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர்.

Related Tags :
Next Story