வேதாரண்யம் பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள் கடலோர போலீசார் விசாரணை
வேதாரண்யம் பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்களை கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்,
இலங்கையில் இருந்து தங்கம் மற்றும் போதை பொருட்கள் வேதாரண்யம் கடல் பகுதி வழியாக தமிழகத்துக்கு கடத்தி வரப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுப்பதற்காக வேதாரண்யம் கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள், கடலோர போலீசார் படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலில் சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ, மர்ம பொருட்கள் கரை ஒதுங்கினாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என கண்காணிப்பு பணியின்போது சுங்கத்துறை அதிகாரிகள் மீனவர்களை அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் புஷ்பவனம் கடற்கரையில் நேற்று 2 பொட்டலங்கள் கரை ஒதுங்கின. இதுகுறித்து மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு, வேதாரண்யம் கடலோர துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான்,வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் புஷ்பவனம் பகுதிக்கு சென்று கடற்கரையில் கிடந்த 2 பொட்டலங்களையும் கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் அந்த பொட்டலங்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியில் மற்றொரு பொட்டலம் கிடப்பதாக மீனவர்கள் கூறினர். இதையடுத்து அந்த பொட்டலத்தையும் போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதேபோல் நாலுவேதபதி பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய ஒரு பொட்டலத்தில் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் கைப்பற்றிய 4 பொட்டலங்களிலும் மொத்தம் 8 கிலோ கஞ்சா இருந்தது.
வேதாரண்யம் கடல் பகுதியில் சுங்க அதிகாரிகள் மற்றும் கடலோர போலீசார் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போதை பொருட்களை கடத்தி வந்தவர்கள் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதை அறிந்து கஞ்சா பொட்டலங்களை கடலில் வீசினார்களா? கடத்தல்காரர்கள் யார்? என்பது பற்றி கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story