குரூப்-2 இலவச பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களுக்கான நுழைவு தேர்வு
குரூப்-2 இலவச பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களுக்கான நுழைவு தேர்வு நடைபெற்றது.
கடலூர்,
தமிழகம் முழுவதும் குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 547 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அடுத்த மாதம்(ஏப்ரல்) தொடங்க இருக்கிறது.
இந்த பயிற்சியில் சேர மொத்தள்ள 100 இடங்களுக்கு 225 பேர் விணப்பித்து இருந்தனர்.
இவர்களில் சிறந்த மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற்கான நுழைவு தேர்வு நேற்று மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் விஜயலட்சுமி மேற்பார்வையில், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மாவட்ட மைய நூலக அலுவலர் ராஜேந்திரன், 2-ம் நிலை நூலகர் சந்திரபாபு, பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகரன், பிரபாகரன் ஆகியோர் தேர்வை கண்காணித்தனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது.
நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற முதல் 100 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நூலக அதிகாரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story