பேரையூர் அருகே சந்தையூரில் சுவற்றை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்


பேரையூர் அருகே சந்தையூரில் சுவற்றை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்
x
தினத்தந்தி 26 March 2018 3:18 AM IST (Updated: 26 March 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

சந்தையூரில் சுவற்றை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி பேரையூர் அருகே போராட்டம் நடைபெற்றது,

பேரையூர்,

பேரையூர் அருகே சந்தையூர் இந்திராகாலனியில் உள்ள கோவில் சுற்று சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருதரப்பினர் ராஜகாளியம்மன் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள வீதியில் உட்கார்ந்துகொண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சந்தையூர் இந்திராகாலனியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உள்ளது.

Next Story