காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 March 2018 4:45 AM IST (Updated: 26 March 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

தென்னிந்திய மாநிலங்களில் மாநில கட்சிகளே ஆள்கின்றன. தாங்கள் ஆளவில்லை என்பதனால், தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிக்குறைப்பு செய்திருப்பதை தமிழக அரசு வன்மையாகக் கண்டிக்க வேண்டும். 29–ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். நியூட்ரினோ ஆராய்ச்சியை எதிர்க்க வில்லை. அதற்கு தமிழகம் பொருத்தமான இடம் இல்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களை எதிர்த்து 28–ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விரிவாக்கத் திட்டப்பணிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்வேன். எடப்பாடி பழனிசாமி அரசு ஓராண்டு நிறைவு செய்திருப்பதை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story