பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் வாலிபர் கைது
ரூ.2 லட்சம் பணம் கேட்டு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் வீணா நாயக். இவருடைய செல்போனுக்கு கடந்த 1-ந்தேதி ஒரு போன் வந்தது. அந்த போனில் எதிர்முனையில் பேசிய நபர், ‘எனக்கு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும். இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன்‘ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், அந்த நபரின் செல்போன் சிக்னலை வைத்து அவரை பிடிக்க முடியவில்லை.
அதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி வரை தினமும் வீணா நாயக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அந்த நபர், ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி வந்தார். மேலும் அந்த நபர், வீணா நாயக்கை ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு கடந்த சில நாட்களாக அந்த நபர் போன் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும், அதே நம்பரில் இருந்து போன் வந்தது. மீண்டும் அவர், ரூ.2 லட்சம் பணம் கேட்டு வீணா நாயக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
போனில் அவர் பேசும்போது, ‘ரூ.2 லட்சம் உடனடியாக எனக்கு கொடுக்காவிட்டால், உன்னை கொலை செய்துவிடுவேன். நீ பெண்ணாக இருப்பதால் தான் இவ்வளவு நாள் உன்னை விட்டு வைத்து உள்ளேன்‘ என்று கூறியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் அந்த நபர் பேசியபோது, வீணா நாயக்கும் அந்த நபரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது மற்ற போலீஸ்காரர்கள் அந்த நம்பரின் சிக்னலை வைத்து விசாரித்தனர். அப்போது அந்த நபர், கொள்ளேகால் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் இருந்து பேசுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் இருந்து போன் பேசிய நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் எலந்தூர் தாலுகா மாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த வினோத் பிரசாத் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இதுதொடர்பாக கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story