‘சட்டசபைக்குள் அனுமதிக்க முடியாது’ நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் கடிதம்
நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் சட்டசபை செயலாளர் மூலம் தனித்தனியாக சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘சட்டசபைக்குள் அனுமதிக்க முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு, 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்த மத்திய அரசின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு அளித்தது.
இந்தநிலையில் புதுவை சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்டதற்கு புதுவை சட்டசபை சபாநாயகர் வைத்திலிங்கம் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பிறகுதான் முடிவு எடுக்க முடியும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்ட சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேருக்கும் சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவின்பேரில், சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு வெளியிட்ட தீர்ப்பில் மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் எனது கருத்தையும் ஐகோர்ட்டு கேட்டு இருக்க வேண்டும். ஆனால் எனது கருத்து எதுவும் கேட்கப்படவில்லை. வழக்கில் என்னை பிரதிவாதியாகவும் சேர்க்கவில்லை.
எனவே எனது கருத்து கேட்காமல் இந்த தீர்ப்பை வெளியிட்டதால் இந்த தீர்ப்பு தெளிவு இல்லாமல் இருக்கிறது. இந்த பிரச்சினையில் சட்ட வல்லுனர்களுடன் கவனமாக ஆய்வு செய்து எனது தீர்ப்பை விரைவில் வெளியிடுவேன். அதுவரை ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க முடியாது என்று கடந்த 12.11.2017-ல் நான் வெளியிட்ட உத்தரவு அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டசபையில் இன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்து இருந்தநிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கை மூலம் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

Related Tags :
Next Story