கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் த.மா.கா., ம.தி.மு.க. கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். நேற்று மொத்தம் 292 மனுக்கள் கொடுக்கப் பட்டன.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து, விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
த.மா.கா. மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமாரதாஸ் தலைமையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல், பொருளாளர் பிச்சைமணி, நகர செயலாளர் ஜெரோம் ஜெயக்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம், இளைஞரணி தலைவர் சிவபிரபு, பொருளாளர் சிவகுமார், செல்வி விலாஸ்குமார், தினேஷ் உள்ளிட்டோரும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நெய்யூர் மேக்கன்கரை பகுதியில் உள்ள ராமச்சந்திரநாடார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல், தீர்மான புத்தகம், பதிவேடு, பில்புக் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் உறுப்பினர்களுக்கு பாலுக்கான பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் கூட்டுறவு சங்க தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவும், எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படவும் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு உறவினர்களாக இருக்கும் பால்வளத்துறை அதிகாரி உள்ளிட்ட சில அதிகாரிகளை உடனடியாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகர்கோவில் இடலாக்குடி சபையார்குளம், இலுப்பையடி காலனி பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலர் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
நாங்கள் மேற்கண்ட பகுதிகளில் வாடகை வீடுகள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வேறு சொந்தமாக எந்தவித நிலபுலன்களும் கிடையாது. வரிய நிலையில் குடும்பம் நடத்தி வரும் எங்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி விவசாயிகள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் சட்டத்தின் பெயரில் பட்டா விவசாய நிலங்களை சுதந்திரமாக அனுபவிக்க முடியாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், வனவிலங்கு சரணாலயம், புலிகள் சரணாலயம் போன்ற திட்டங்களை குடியிருப்போரிடமும், விவசாயிகளிடமும், ஆதிவாசிகளிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல் கடந்த பல வருடங்களாக வனத்துறையானது இயற்கை நீதிக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது. புலிகள் சரணாலயம் நடைமுறைக்கு வந்தால் குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் நிம்மதியாக மக்கள் வாழ முடியாது. எந்த நேரத்திலும் புலிகளால் உயிர்ச்சேதம் ஏற்படலாம்.
வன விலங்குகளால் குமரி மாவட்டத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அனைத்து பகுதிகளும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம். ரப்பர், கிராம்பு, நல்லமிளகு, தென்னை, வாழை பயிரிடப்படும் நிலங்களை கையகப்படுத்தினால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்து குமரி மாவட்ட மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story