கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கேட்டு, கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிதம்பரனார் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வந்தனர்.

அவர்கள், விளாத்திகுளம் வைப்பாறு ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி, உள்ளூர் கட்டுமான பணிக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு, கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த காத்திருப்பு போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில் முடங்கி விட்டது.

இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, உள்ளுர் கட்டுமான பணிக்கு தேவையான மணலை மாட்டு வண்டியில் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.

Next Story