ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் விடமாட்டேன் புதுக்கோட்டையில் வைகோ பேட்டி
ஸ்டெர்லைட் ஆலையை நான் மூடாமல் விடமாட்டேன் என புதுக்கோட்டையில் வைகோ கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. மாநாடு மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைத்துள்ளது. தி.மு.க. சமூக நீதி காக்க எடுத்த நடவடிக்கைகள், பிரதமர் மோடி தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தை விரிவாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தை பாலைவனமாக ஆக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.
கண்டிப்பாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. காவிரி பிரச்சினை, அரசியல் சாசன அமர்விற்கு சென்றால் தான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதல் முதலாக குரல் கொடுத்தவர் இந்த வைகோ தான். இதற்காக நீதிமன்றமும் நான் சென்றேன். தற்போது மக்கள் தன்எழுச்சியாக போராடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் நான் விடமாட்டேன். இதற்கு எதிராக போராட்டம் நடத்திய பல கட்சிகள் காணாமல் போய்விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story