ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரி கைது
திருமண மண்டபம் கட்டுவதற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அதே ஊரில் திருமண மண்டபம் கட்டுவதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என அந்த தீயணைப்பு நிலைய அதிகாரி தமிழ்வாணன் கேட்டிருக்கிறார்.
ரூ.30 ஆயிரம் லஞ்சம்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலகிருஷ்ணன், இதுகுறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை அரியலூர் அருகில் விளாங்குடி கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு தொழிற்சாலை முன்பாக தமிழ்வாணனிடம், பாலகிருஷ்ணன் கொடுத்தார்.
தீயணைப்பு நிலைய அதிகாரி கைது
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து வந்து கையும், களவுமாக தமிழ்வாணனை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழ்வாணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்வாணன் லஞ்சம் பெற்றதாக போலீசில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story