வேட்பு மனு தாக்கலின்போது அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல்-நாற்காலி வீச்சு


வேட்பு மனு தாக்கலின்போது அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல்-நாற்காலி வீச்சு
x
தினத்தந்தி 27 March 2018 4:30 AM IST (Updated: 27 March 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கள்ளிக்குடியில் கூட்டுறவு சங்க தேர்்தல் வேட்பு மனு தாக்கலின் போது அ.தி.மு.க.-தினகரன் அணியினர்் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நாற்காலிகளை தூக்கி வீசியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் வேட்பு மனு தாக்கல் நடந்தது. ஒப்புகை சீட்டு தராததால் அதிகாரிகளை அலுவலகத்திற்குள் வைத்து தி.மு.க.வினர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் 4 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வரும் 2-ந்் தேதியன்று 44 சங்கங்களுக்கு தேர்்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இதையொட்டி திருவாரூர் அருகே உள்ள கள்ளிக்குடி கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது. காலை முதல் கூட்டுறவு வங்கி முன்பு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் குவிந்து இருந்தனர்.

ஒரே இடத்தில் அரசியல் கட்சியினர் திரண்டு இருந்ததால் அந்த சாலை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக செல்பவர்கள் அரசியல் கட்சியினரிடம் தகராறு செய்தனர். இந்த நிலையில் நண்பகல் 12 மணி வரை தேர்்தல் நடத்தும் அதிகாரி அங்கு வரவில்லை.

இந்த நிலையில் வேட்பு மனு பெறப்படாததால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் திடீரென அ.தி.மு.க.வினரிடம் தகராறு செய்தனர். அப்போது தி்.மு.க.வை சேர்ந்த அடிபுதுச்சேரியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் திடீரென சப்தம் போட்டுக்கொண்டு அங்கு கிடந்த ஒரு நாற்காலியை தூக்கி விசினார். இதனால் பிரச்சினை திசை மாறியது. உடனே அ.தி.மு.கவினர் பாஸ்கரன் மீது நாற்காலியை தூக்கியடித்து விரட்டினர்.

இந்த மோதல் சம்பவம் பற்றிய தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் சம்பவ இடத்திற்கு சென்று அரசியல் கட்சியினரை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அனைத்து கட்சியினரும் ஏற்க மறுத்தனர்.

இதனையடுத்து அனைத்து கட்சியினரும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதை தள்ளி வைக்க கூடாது என கோரிக்்கை விடுத்தனர். பின்னர் மதியத்திற்கு மேல் அதிகாரிகள் வேட்பு மனுக்களை பெற்று கொண்டனர். அப்போது அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தற்கான ஒப்புகை சீட்டை தி.மு.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கு அதிகாரிகள் தரவில்லை. இதனால் தி.மு.க.வினர், அதிகாரிகளை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் மீட்கப்பட்டனர். இதனால் வேட்பு மனு தாக்கல் காலை முதல் பரபரப்பாக நடைபெற்றது.

இதுகுறித்து தி.மு.க ஒன்றிய செயலாளர் தேவா கூறுகையில், தேர்தலி்ல் வேட்பு மனு தாக்கல் செய்தற்கு உரிய ஒப்புகை சீட்டு அதிகாரிகள் தரவில்லை. எனவே தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே கட்சி தலைமையின் உத்தரவை பெற்று கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார். 

Next Story