ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தி வக்கீல்கள் சாலை மறியல்; 37 பேர் கைது
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாமரைக்குளம்,
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் சங்கத்தினர் கடந்த 16-ந் தேதி முதல் தினந்தோறும் உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, நீதி மன்றத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
37 பேர் கைது
போராட்டத்தில் அரசு ஒதுக்கிய நிலத்தில் உடனடியாக நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து வக்கீல்கள் மறியலில் ஈடுபட்டதால் 4 பெண் வக்கீல்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்து அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story