கோவில் காவலராக பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 மாதமாகசம்பளம் வழங்கப்படாத நிலை, நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காவலர்களாக பணியாற்றி வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கப்படாத நிலை உள்ளதால் உடனடி நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் களில் முன்னாள் ராணுவத்தினர் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பளம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் மாதந்தோறும் பட்டுவாடா செய்யப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் 102 முன்னாள் ராணுவத்தினர் கோவில்களில் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் பட்டுவாடா செய்யப்படாத நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.ஆனாலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் பாதிப்பு அடைந்த முன்னாள் ராணுவத்தினர் நேற்று தங்களுக்கு சம்பள பட்டுவாடா கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story