இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க கோரிக்கை
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்கக்கோரி அவர்களது குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த எராளமான பெண்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் குடும்பத்தினர் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி 2 படகுகளில் 12 பேரும், பிப்ரவரி மாதம் 7-ந் தேதி ஒரு படகில் 7 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.
நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இவர்களில் செல்வி என்பவரின் மகன் ரொம்பிலிஸ் என்பவர் மனநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார். எனவே, இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் அருகே உள்ள தபால்சாவடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் நடத்தப்பட்டு வரும் தார் உருக்கம் நிலையத்தால் அனைவரும் சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் பாதிப்பு உள்ளதாக கண்டறிந்து தார் கலவை நிலையத்தை மூட நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் திறந்துசெயல்பட்டு வருகிறது. இதனால், நாங்கள் அனைவரும் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம். எனவே, உடனடியாக இந்த தார் கலவை நிலையத்தை மூட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தொண்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த தங்களுக்கு அரசால் இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் அரசின் சார்பில் சாலை வசதி செய்து கொடுக்கப்படாததால் நாங்கள் வீடுகட்டி வசிக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, உடனடியாக எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் சாலை , குடிநீர் , மின்வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
ராமேசுவரம் ரெயில்வேபீடர் ரோடு பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திரளாக வந்து அளித்த மனுவில், ராமேசுவரம் ராமதீர்த்தம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறியதை தொடர்ந்து நாங்கள் 32 பேர் ரூ.38 லட்சத்தினை கொடுத்தோம். இந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்தநிலையில் ஒருவருட காலத்திற்குள் திருப்பி செலுத்தி விடுவதாக தெரிவித்தவர்கள் இதுவரை வழங்காமல் உள்ளனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறதி அளித்தார்.

Related Tags :
Next Story