புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைச்சர் விஜயபாஸ்கர்- வி.சாந்தா திறந்து வைத்தனர்
புதுக்கோட்டையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர், வி.சாந்தா திறந்து வைத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா ஆகியோர் கலந்துகொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக இந்த புற்றுநோய் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் புற்றுநோய் சிகிச்சை வாகனம் நேரடியாக சென்று அந்த கிராமங்களில் 3 நாள் தங்கியிருந்து பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அப்போது பொதுமக்களிடம் புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு புதுக்கோட்டை புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மேற்சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அடையாறு புற்றுநோய் மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும், என்றார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர். சாந்தா பேசுகையில், புற்றுநோய் என்றாலே உயிர்க்கொல்லி நோயாக எண்ணி, அனைவரும் அச்சமடைகிறார்கள். ஆனால் புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவதன் மூலம் மகத்தான மனித உயிர்கள் காக்கப்படுகின்றன. தமிழக அரசு புற்றுநோய் ஆராய்ச்சிக்கு தேவையான இடங்கள், கருவிகள், தேவையான நிதிகளை வழங்குகிறார்கள். இதனைக்கொண்டு ஆராய்ச்சி மையத்தின் சார்பில், புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறோம், என்றார்.
இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் கணேஷ், உதவி கலெக்டர் கே.எம்.சரயு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துணை தலைவர் டாக்டர். ஏ.ஹேமந்த்ராஜ், ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராதிகா, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கர், டாக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story