பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்பாதை வழித்தடத்தை கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அமைக்க வேண்டும்
பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில்பாதை வழித்தடத்தை ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அமைக்க வேண்டும் என்று 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தஞ்சை மற்றும் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த குளிச்சப்பட்டு, சூரக்கோட்டை, வரவுக்கோட்டை, நாயக்கன்கோட்டை, பிரண்டான்கோட்டை, மடிகை, வாண்டையார் இருப்பு, துறையூர், மேலஉளூர், உப்பன்கரை, சின்னபருத்திக்கோட்டை, பெரிய பருத்திக்கோட்டை, தென்னமநாடு ஆகிய 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வந்தனர். பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தஞ்சை- பட்டுக்கோட்டை ரெயில்பாதை அமைப்பதற்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரெயில்பாதை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு அது ரெயில்வே நிலம் என அரசு பதிவேட்டில் உள்ளது. மேற்படி கையகப்படுத்தப்பட்ட இடத்தின் வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து ஒரத்தநாடு வரை ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடத்தில் புதிய பாதை வருகிறது.
ஆனால் ஒரத்தநாடு- தஞ்சை வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் மேற்கண்ட 13 கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள் பாதிக்கப்படும். புதிய வழித்தடத்தால் விவசாயிகள் தங்கள் நிலங்களை இழப்பதுடன் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து விடுவார்கள். எனவே புதிய ரெயில்பாதையை ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அமைக்க வேண்டும். அதற்கு கலெக்டர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
தஞசையை அடுத்த தோட்டக்காட்டை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிரமத்தில் 100 நாள் வேலை சரியாக நடைபெறவில்லை. இதுவரை 6 நாட்கள் தான் வேலை அளித்துள்ளனர். ஆனால் நடப்பாண்டுக்கு 5 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், தொழிலாளர்களுக்கு சரியாக வேலை வழங்காமல் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட குறைவாக வழங்குகிறார்கள். எனவே கலெக்டர் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் பகுதியில் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. பல இடங்களில் இன்னும் கழிவறை கட்டப்படாமல் உள்ளது. ஆனால் கட்டியதாக கணக்கு காட்டப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story